ஆதி விநாயகரும் நினைவன் கந்தன் வரலாறும்

கி.பி 1509 ஆண்டு தொடக்கம் முலஸ்தான விக்கிரமாக வழிபட்ட விநாயகப்பெருமானின் திருத் தோற்றம்.  இவ் விக்கிரகம் நினைவன் கந்தன் எனும் அடியவரது அற்புதக்காலத்திற்கு பின்னர்  பிரதிஸ்டை செய்யப்பட்டதாக கர்ணபரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகின்றது. அக்காலத்தில் கந்தனை பறங்கியர் கைதுசெய்வதற்காக துரத்தியபோது கந்தன் ஆலய மூன்றலில் உள்ள விருட்சத்தில் ஏறி ஒளித்திருந்தபோது அவர்களுக்கு ஒளித்த கந்தன் ஒரு குளவிக்கூடுவடிவாக காட்டப்பட்டு கந்தன் மறைக்கப்பட்டதாகவும் அதன் வேண்டுதலாக நினைவன் கந்தனால் விநாயகர் விக்கிரகமும் சிறிய ஆலய மணியும் காணிக்கையாக வழங்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றது. எமது ஆலய  மண்டபத்தில் பூசை நேரங்களில் விக்கிரகத்தினையும் மற்றும் நினைவன் கந்தன் மணியையும் பார்வையிட்டு வழிபட முடியும்

அடியவர்களே ஆதி முதல் விக்கிரகம் தொடர்பான வரலாறும் புகைப்படமும் விரைவில் பதிவு செய்யப்படும்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares