ஆலய பரிபாலன சபை தலைவரது ஆசிச் செய்தி

ஈழத்திரு நாட்டின் வன்னிப் பிரதேசத்தின் தொன்மை வாய்ந்த ஆலயமாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயம் திகழ்ந்து வருகின்றது, இவ்வாலயம் 16ம் நூற்றாண்டு காலத்தில் பரராசசேகர மன்னனால் திருத்தப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதாக வரலாற்று ஆய்வுகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இதனால் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் என்பது புலனாகின்றது. வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலுக்கான ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெறும் இடமாக திகழ்ந்து வருவதுடன் வற்றாப்பளை பொங்கலுக்கு முதல் நாள் இவ் ஆலயத்திலும் பொங்கல் சிறப்பாக நடைபெறும்

பாக்கு தெண்டல் எனப்படும் பாரம்பரிய ஆலய பொங்கல் கருமங்களுடன் ஆரம்பித்து புனித தீர்த்தம் எடுக்கப்பட்டு 7நாட்கள் எமது ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கு எரியும் அற்புத நிகழ்வு நடந்தேறிய வண்ணமுள்ளது.

தொன்மையும் பெருமையும் அற்புதங்களும் நிறைந்து விளங்கும் காட்டு விநாயகர் ஆலயம் இவ்வருட பொங்கலுக்கான எற்பாடுகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இவ் ஆலயத்தின் புதுமைகளையும் பெருமைகளையும் காலச் சக்கரத்தில் நிகழ்ந்த அற்புதங்களையும் அகிலமெங்கும் பரவியிருக்கு காட்டு விநாயகர் அடிவர்களுக்கு நேரடி தரிசனம் கிடைக்க வேண்டுமெனும் எமது நீண்ட நெடுநாள் கனவுக்கு அமைவாக காட்டு விநாயகர் இணையத்தளம்  (www.kadduvinayagar.com)   உருவாக்கப்பட்டு சிறப்புடன் இயங்கிவருவதையிட்டு எமது ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு மிகவும் பாரட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதுடன் எனது ஆசியுடன் விநாயகப் பெருமானின் ஆசி மேலொங்கி மேலும் சிறப்புற பல படைப்புக்களை எமது அடியவர்களுக்காக வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன்.

எமது ஆலயத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவுக்காக அயராது பாடுபட்டுவரும் ஆலய குருக்கள் மற்றும் நோன்புக்காரர்களும், அடியவர்களும் பொங்கல் ஏற்பாட்டாளர்களும் அரச அதிகாரிகள், பொலிஸ் பிரிவினர் மற்றும் ஆலய தொண்டர்கள் எமது பரிபாலன சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல காட்டு விநாயகர் அருளும் கண்ணகி அம்மன் அருளும் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென பிரார்தனை செய்கின்றேன்.

திரு த.பரஞ்சோதி

கெளரவ தலைவர்

ஆலய பரிபாலன சபை

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயம்

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares