ஆலய பிரதம குருக்களது ஆசிச் செய்தி

பிரம்மஶ்ரீ கார்த்திகேசுஐயர் ரகுநாதகுருக்கள்
பிரதம குருக்கள்
காட்டு விநாயகர் ஆலயம்/ஶ்ரீ கல்யாண வேலவர் ஆலயம்
முள்ளியவளை

ஆலய பிரதம குருக்கள் பிரம்மஶ்ரீ கார்த்திகேசுஐயர் ரகுநாதகுருக்கள் அவர்களால் எமது காட்டுவிநாயகர் இணையத்தளத்திற்காக வழங்கிய பொங்கல் உற்சவகால ஆசிச்செய்தி.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் உற்சவமானது வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் உற்சவத்திற்கான முதல் பொங்கலாகும் எனவே 2017ம் ஆண்டுக்கான பொங்கல் உற்சவத்திற்கான பாக்குத்தெண்டல் எனப்படும் ஆயத்த கருமம் நடைபெற்று தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆலய அம்மன் மண்டபத்திலே புனித தீர்த்ததில் அம்மனுக்கு விளக்கு எரிக்கப்படும் அற்புதம் நடைபெற்ற வண்ணமுள்ளது.

இவ்வாண்டு பொங்கல் உற்சவத்திலும் பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டு காட்டு விநாயகர் குடிகொண்ட பதிதனிலே அம்மனுக்கு ஏழு நாட்களும் நிகழும் அற்புதத்தில் கலந்து விநாயகப் பெருமான், கண்ணகை அம்மனின் அருள்கடட்ஷம்களை பெற்றேகுமாறு கேட்டுக்கொள்வதுடன் பொங்கலை இவ்வருடமும் சிறப்பாக செய்யவேண்டும் எனவும்   அடியவர்களது வேண்டுகைகள் ஆண்டவனால் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் அயராது பாடுபடும் ஆலய பரிபாலன சபைக்கு எனது வாழ்த்துக்களை   வழங்கி காட்டு விநாயகர் இணையம் அகிலமெங்கும் வலம்வந்து அடியவர்கள் குறைதீர்கவேண்டுமென எனது ஆசிகளை இவ் இணையத்திற்கு வழங்குவதில் மிகுந்த மகிச்சியடைகின்றேன்.  

நன்றி.

பிரம்மஶ்ரீ கார்த்திகேசுஐயர் ரகுநாதகுருக்கள்
பிரதம குருக்கள்
காட்டு விநாயகர் ஆலயம்/ஶ்ரீ கல்யாண வேலவர் ஆலயம்
முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares