ஆலய விசேட பொதுக்கூட்டம் 25.06.2017 (ஞாயிற்றுக் கிழமை)

விசேட பொதுக்கூட்டம்:

முள்ளியவளை  அருள்மிகு காட்டு விநாயகர் ஆலய  மெய்யடியார்களே!

எமது ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள இராஜகோபுரம், இரட்டை மணிக்கோபுரம், வைரவர் ஆலயம், வசந்த மண்டபம், மணிமண்டபம் மற்றும் ஏனைய ஆலய புனருத்தான வேலைகளுக்கான சங்குஸ்தாபன விழா எதிர்வரும் மாதம் நடாத்துவதற்கு விநாயகப்பெருமான் அருள்பாலித்துள்ளார்,

இவ் விடயம்  தொடர்பாக ஆலய அடியவர்களின் ஆலோசனையை பெறுவதற்கும் புனருத்தான திருப்பணி வேலைகளுக்கான தெரிவுக்குழுவை தெரிவு செய்வதற்குமான கலந்துரையாடல்:

திர்வரும் 25.06.2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் ஆலய பரிபாலனசபைத் தலைவர்
திருவாளர் த.பரஞ்சோதி அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளதால்  ஆலய மெய்யடியார்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

செயலாளர்
ஆலய பரிபாலன சபை
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயம்
முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares