இன்று ஆடிப் பிறப்பு

 

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு.

இன்றைய தினம் திங்கட்கிழமை யூலை 17ஆம் தேதி பிறக்கி

றது ஆடி பிறக்கின்றது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று அனைவரும் கொண்டாடுவதில்லை மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்? சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன?

தமிழன் இயற்கையோடு இணைந்து வாழ்பவன், அவனது கொண்டாட்டங்களும் இயற்கையோடு இணைந்தவையே. ஆடி முதல்நாளில் சூரியபகவான் தான் செல்லும் பாதையின் திசையை வடக்கில் இருந்து தெற்கிற்கு மாற்றிக் கொள்வதாக நம்பப் படுகிறது. அந்த ஆடி முதல் தேதியில் இருந்து மார்கழி 31ஆம் தேதி வரையான 6 மாதகாலம் தட்சாயண புண்ணிய காலம் என்றும், இந்த 6 மா

த காலமும் தேவலோகத்தில் இரவாகவும், தைமாதப் பிறப்பான தை முதல் நாளில் அங்கே பகல் காலம் ஆரம்பமாகிறது என்றும், இது உத்தராயண புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. தேவலோகத்தில் இராக்காலம் ஆரம்பமாகின்ற ஆடி முதல் நாளைத்தான் நாம் இங்கு ஆடிப்பிறப்பாகக் கொண்டாடுகிறோம். 

எமது நாட்டில் ஆடிமாதத்தில் மழை பெய்ய

 ஆரம்பிப்பதால் விவசாயிகளுக்கு அது விதைக்கும் காலம். விவசாயிகள் எல்லாம் அப்போது மிகவும் உற்சாகமாகத் தமது வயல்களில் வேலையை ஆரம்பிக்கும் பொருட்டே ஆடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆடிப்பிறப்பில் நெல் விதைத்துத் தைப்பிறப்பில் அறுவடை. அறுவடையில் வந்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு, மீண்டும் திசை மாறி வரும் சூரியபகவானுக்கு வரவேற்பு. அன்றுதான் தமிழர்க்கு ஆண்டுப் பிறப்பு. எல்லாமே சரியாகப் பொருந்துகின்றன அல்லவா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆடிப் பிறப்பைத் தொடர்ந்து, ஆடிமாதம் ஆடி அசைந்து போகாமல், ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடிவேல், ஆடிஅமாவாசை என்று அத்தனை சிறப்புக்களுடன் ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்டுகின்ற மாதமாக ஆகிவிட்டது ஆடிமாதம்.

இன்றை நாளில் எமது ஆலயத்தில் சிறப்பு அபிசேக ஆராதனைகள்  நடைபெற்றவண்ணமுள்ளது. அடியவர்கள் அனைவரும் கலந்து விநாயகப்பெருமானின் இஸ்டசித்திகளை பெற்றேகுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

 

இன்றைய உபயகாரர்:

திருவாளர் த.பரஞ்சோதி குடும்பத்தினர்

காட்டு விநாயகர் கோவிலடி,  3ம் வட்டாரம், முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares