இராஜகோபுர கட்டுமானப் பணிக்கான ஆரம்ப வேலை

எமது ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள பஞ்சதள இராஜகோபுர கட்டுமானப் பணிக்கான ஆரம்ப வேலை  
இன்றைய தினம் விநாயகப்பெருமானுக்கு நடைபெற்ற மதிய நேர  சிறப்பு பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில்  ஆலய பிரதம குரு, ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆலய திருப்பணிச் சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய அடியவர்கள் கலந்துகொண்டதுடன் இராஜகோபுர கட்டுமான ஸ்தாபகர் திருவாளர் ச.சிவராசா அவர்களால் நாள்வேலை  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து இராஜகோபுர கட்டுமான வேலைக்கான சங்குஸ்தாபன விழா(அடிக்கல் நாட்டும் வைபவம்) எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30.06.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு சிறப்பாக நடாத்தப்படவுள்ளது என்பதை ஆலய அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையுடன் இராஜகோபுர நிர்மாண ஒழுங்கமைப்புக் குழுவினர் அறியத்தருகின்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares