உலகமெங்கும் உலாவரும் காட்டுவிநாயகர் இணையம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கிராமத்தின் மத்திய பகுதியில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கும் காட்டு விநாயகப்பெருமானுக்கு இணையத் தளம் ஒன்றினை உருவாக்கி உலகெங்கும் பரந்து வாழுகின்ற எமது ஆலய  அடியார்களின் முன் கொண்டுவருவதில் ஆலய பரிபாலன சபையினராகிய நாம்  மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த இணையத்தளத்தின் மூலமாக ஆலயத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும்,  நேர்காணலாகவும் அவ்வப்போது தருவதற்கு முயற்சிகள் செய்து வருகின்றோம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களது நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களது கோவிற் கடமைகளைச் செய்வதற்கும், நேர்த்திக்கடன்களை நிறைவாக்குவதற்கும்,  எமது ஆலய தொலைபேசி இலக்கம் அல்லது பரிபாலன சபை உறுப்பினர்களது தொடர்பு இலங்கங்களுடனோ, அல்லது மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய  பரிபாலன சபை,

முள்ளியவளை,  முல்லைத்தீவு, இலங்கை.

தொலைபேசி:+94-21 2290391
மின்னஞ்சல் : kadduvinayagaralayam@gmail.com

பரிபாலனசபை:

தலைவர்: +94 770889603

செயலாளர்: +94 777275992

பொருளாளர்: +94 77234116

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares