காட்டு விநாயகர் ஆலய மூலஸ்தானம் சிறப்பு பார்வை

1506 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு  வழிபாடுகள் செய்யப்பட்ட இவ் ஆலயம் 1935 ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் மூலஸ்தான பண்டிகை உட்பாகத்தில் ஆதாரமளிக்கும் கல்வெட்டு காணப்படுகின்றது. இக் காலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் காவல் தெய்வ வழிபாடாக ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாக செவி வழி கதைகள் மூலமும் அக்காலப்பகுதியில் பிறந்து தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மூத்தவர்கள் மூலம் உண்மை புலப்படுகின்றது.

உண்மைநிலையில் ஆலய மூலஸ்தானம் அழகிய வெண்கல் பொருத்தி அமைக்கப்பட்ட உறுதியான கட்டுமானமாக காணப்படுகின்றது. இங்கு கருங்கல் தூண்களால் கதவு நிலைகள் அமைக்கப்பட்டு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது அற்புதமான விடயமாகவே காணப்படுகின்றது. அமைப்பு வரிசையில் 9 அடி 4 இஞ்சி எனும் கால் பிரவாக ஆகமவிதிகளில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது. அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள பெருமான் பீடம் ஆதே கால்பிரவாக அளவில் நிலமட்டத்திலிருந்து அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் எனினும் தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக மண் புறள்வடைந்து மட்ட அளவிடை ஏழாக காணப்படுகின்றது.

தகவல்களுடன் தொடரும்….

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares