காட்டு விநாயகர் பொங்கல் உற்சவம் 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை

https://www.facebook.com/kaaddavinayakarkovil

காட்டு விநாயகர் ஆலய பொங்கல் உற்சவ சிறப்பு பூசைகள் தொடர்பான விபரம்:

அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் விநாயகர் அபிசேகத்தை தொடர்ந்து காட்டு விநாயகப் பெருமானுக்கு சந்தணக்காப்பு இடம்பெறும் தொடர்ந்து 6.00 மணிக்கு காலை பூசை விநாயகப்பெருமானுக்கும் காலை 7.00 மணியளவில் அம்மனுக்கும் சிறப்பு பொங்கல் பூசைகள் இடம்பெறும்.

பூசைகளை தொடர்ந்து ஆலய நேர்த்திக் கடன்களை செய்யும் அடியவர்கள் ஆலய பரிபாலன சபையுடன் தொட்புகொண்டு தங்களது நேர்திக்கடன்களை நிறைவுசெய்யலாம், 

மதியம் 12.00 மணியளவில் விநாயகர் பூசையும் அதனை தொடர்ந்து அம்மன் பூசையும் இடம்பெறும். அர்ச்சனை செய்யும் அடியவர்கள் காலை பூசை தொடக்கம் இரவு பொங்கல் வரை தங்களது அர்ச்சனைகளை விநாயகருக்கும் அம்மனுக்கும் செய்யலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

காலை அபிசேக உபயகாரர் திரு ந.புகழ்ஜெயந்தன் குடும்பத்தினர்

காலை சந்தனக்காப்பு உபயகாரர் திரு செ.மணிநாதன் குடுமபத்தினர்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares