கோவலன் கூத்து 03.06.2017

மரபுரிமை பாரம்பரியம் இரண்டுமே எமது வாழ்வியலில் அழியாத பொக்கிஷம்களாக பேணப்பட வேண்டியவை. இவை இரண்டையும் அழியாமல் காப்பது கிராமத்து மண்வாசனையே. தற்கால தொழில்நுட்ப மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் இளையவர்களில் மாற்றங்கள் வந்தபோதும் கிராமத்து மணம் கமழும் எமது மண்ணில் பிறந்த இளைய தலைமுறைகள் என்றும் தமது பாரம்பரியத்தை கட்டிக்காப்பர்கள் என்பதில் ஐயமில்லை.

முள்ளியவளையின் அழகு சொல்லும் பாரம்பரிய கலைகள் இன்றும் அழிந்துவிடாமல் மெருகூட்டப்படுவதில் முதுபெரும் கலைஞர்களையும் அவர்கள் வழிவரும் இளைய தலைமுறைக்கலைஞர்களின் ஆர்வத்தின் வெளிப்படுத்தலே இன்றும் கலையும் அதனோடிணைந்த    பாரம்பரிய கூத்துக் கலையும் அழியாமல் காக்கப்படுகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகை அம்மனின் வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் காட்டா விநாயகர் ஆலய மூன்றலில் வட்டக்களரி அமைத்து கோவலன் கண்ணகி சிலம்புகூறல் காவியம் நாட்டுக்கூத்து வடிவில் பாரம்பரிய வழிவந்த கலைஞர்களால் காட்சிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares