திருப்பணிச் சபை அங்குரார்ப்பண நிகழ்வு

ஆலய அபிவிருத்தியுடன் கூடிய திருப்பணி  வேலைகள் செய்வதற்கு  காட்டு விநாயகப் பெருமானின் திருவருள்  கூடிய இன்றைய நன்நாளில் ஆலயத்தில்   இடம்பெறவுள்ள திருப்பணி வேலைகளுக்கான  திருப்பணிச் சபை அங்குரார்பண நிகழ்வும் விசேட பொதுக்கூட்டமும் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திருவாளர் த.பரஞ்சோதி அவர்களது  தலைமையில்  சிறப்பாக  நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் பெருமளவிலான அடியவர்கள் கலந்து கொண்டதுடன்  ஆலய பிரதம குருக்கள் சிவஶ்ரீ கா.ரகுநாதக்குருக்கள் அவர்களும் ஆலயத்திற்கான இராஜகோபுரத்தினை தனது சொந்த நிதி மூலம் அமைக்க முன்வந்துள்ள திருவாளர் ச.சிவராசா அவர்களும் மற்றும் ஆலயத்திற்கு பொறுப்பான கலாச்சார திணைக்கள இணைப்பாளர் திருவாளர் மோகன்ராஜ், பிரிவுக் கிராம சேவையாளர் திரு க.விக்கினேஸ்வரன், திரு தி.ஜெயபாபு ஆகியோர் விசேடமாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கலந்துரையாடலில் ஆலய அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை ஆலய அடியவர்கள் மற்றும் சமூகமட்ட பெரியவர்களாலும் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பணிச் சபை அங்குரார்பண நிகழ்வு கலாச்சாரத் திணைக்கள இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. திருப்பணிசபையின் தலைவராக திருவாளர் த.பரஞ்சோதி அவர்களும் துணைத் தலைவராக திருவாளர் ச.கனகரத்தினம் அவர்களும் செயலாளராக திருவாளர் சு.திருஞானம் அவர்களும் உப செயலாளராக திரு ந.புகழ்வேந்தன் அவர்களும் திருப்பணிச் சபை பொருளாளராக திருவாளர் க.அருளானந்தம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares