திருப்பணி நிதி

விநாயகப்பெருமான் மெய் அடியார்களே: எமது ஆலயத்தில் பாரிய புனரமைப்பு வேலைகள் நடைபெற்றவண்ணமுள்ளது. ஆலயம் முழுமையாக புனருத்தானம் செய்யப்படுகின்றது. ஆலயம் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மழைகாரணமாக வெள்ளப்பாதிப்பிற்கு உட்பட்டு வருகின்றமையை கருத்திற்கொண்ட ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தை புனருத்தாபனம் செய்ய திட்டமிட்ட வேளையில் விநாயகப்பெருமான் திருவருள்கைகூடியபோது பாரிய முதற்திருபணியாக பஞ்சதள இராஜகோபுரத்தை திருவாளர் சந்திரசேகரம் சிவராசா அவர்கள் உபயமளித்த நல்வேளையில் ஏனைய திருபணி வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வேளையில் திருமதி ஞானசேகரம் தனேஸ்வரி வசந்த மண்டப திருப்பணியையும் திருவாளர் சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள் வைரவர் ஆலயத்தினையும் திருவாளர் வல்லிபுரம் கந்தையா குடும்பத்தினர் மணிக்கோபுரம் ஒன்றினையும் மற்றைய மணிக்கோபுரத்தை திருவாளர் செல்லத்துரை கேசலநாதன் குடும்பத்தினரும் முருகன் ஆலயத்தினை பொன்னுக்கிளி ஜெயரூபன் குடும்பத்தினரும் புதிய அம்மன் ஆலயத்தை திருவாளர் த.பரஞ்சோதி குடும்பத்தினரும் 58 அலங்கார தூண்களை அடியவர்கள் ஒவ்வொருதரும் உபயமளிக்கும் வேளையில் ஆலய மூலஸ்தான திருப்பணியை முழுமையாக அடியவர்கள் அனைவரது பங்களிப்புடன் அமைக்க திட்டமிடப்பட்டு வேலைகள் நடைபெற்றவண்ணமுள்ளது. கூரை தள அமைப்பிற்கு முழுமையாக 2கோடி ரூபாக்கள் தேவை எனவே ஒவ்வொரு அடியவர்களும் காட்டுவிநாயகப்பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைப்பதற்கு தங்களது பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வைப்புக்காக:

 காட்டு விநாயகர் ஆலய திருப்பணிச்சபை

மக்கள் வங்கி,

முல்லைத்தீவு

நடை முறை க.இல -020-100130051056

வெளிநாட்டு வைப்புக்களுக்காக

SWIFT CODE:- PSBKLKLX/PSBKLKLX023

Sharing is caring!