நாக சதுர்த்தியும் ஆடிப்பூரமும்

26.07.2017 புதன்கிழமை நாக சதுர்த்தி விரதமாகும் அன்றைய தினம் எமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் அபிசேக ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் நவக்கிரக வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது.

 காலை அபிசேக ஆராதனைகளை தொடர்ந்து கஞ்சிகலசம் இடம்பெற்று மருவத்தூர் அதிபராசக்தி மன்றத்தினரால் எமது ஆலய அம்மன் சன்நிதியிலிருந்து பாற்குட நடைபவனி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக அதிபராசக்தி ஆலயத்தை சென்றடைந்து அங்கு நிறைவுபெறும்.

ஆடிப்பூர நன்நாளில் பெண்கள் பாற்குடமேந்தி அம்மன் திருவடியை வணங்குவதால் நினைத்த கருமங்கள் ஈடேறும் என்பது பழமை.   

 

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares