பொங்கல் தின ஆசிச்செய்தி (கலாபூசணம் ஆ.முருகுப்பிள்ளை)

வற்றாத வளங்கொளிக்கும் வன்னித் திருநாட்டின் முத்தாக ஒளிர்கின்ற முள்ளியவளைப் பதியில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் மூத்த விநாயகர் எனவும் காட்டு விநாயகர் எனவும் காட்டா விநாயகர் எனவும் அழைக்கப்படும் முள்ளியவளை காட்டு விநாயகருக்கு பொங்கல் நிகழ்வு நிகழவுள்ள இப் புனித நன்நாளில் காட்டு விநாயகரையும் கண்ணகை அம்மனையும் கல்யாண வேலவரையும் வணங்கி எனது ஆசியுரையை தொடர்கின்றேன்.

கற்பரசி கண்ணகை அம்மனின் வைகாசி அம்மனின் வைகாசி விசாகப் பொங்கலுக்கு வங்க பெருங்கடலாம் சிலாவத்தை தீர்த்தக்  கடலில் தீர்த்தமெடுத்து ஏழு நாட்கள் காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை காட்டு விநாயகர் ஆலயத்தில்  அம்மன் பொங்கல் சிறப்பாக நடைபெற்று திங்கட்கிழமை அதிகாலைத் தீர்தம் வற்றாப்பளை ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு   வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிறப்பான பொங்கல் உற்சவம் நடைபெறும்.

ஊர் வழக்கம்: வைகாசி திங்கள் பிறந்தால் வாடை காற்று மேலோங்கி அடிக்க ஊரெங்கும்  பொங்கல் மணங்கமள உறவுகள் ஒன்று சேரும் நன் நாளுக்காக முன்னாயத்த நடவடிக்கையில் (மாவிடித்தல், நெல் குற்றுதல், தூள் இடித்தல், வீடு சீராக்கல் எனும் பல கருமங்கள்) பத்தினித் தாய்த் தெய்வம் கண்ணகைக்கு பொங்கல் காணமுன் அதாவது தீர்த்தம் எடுக்க முன்னர் மக்களால் பாரம்பரிய கருமங்களாக பேணப்பட்டு வந்தமையும் பாரம்பரியங்கள் பேணப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தை ஒப்பிடும்போது இவ்வருடன் பாரம்பரியம்கள், கலாச்சாரங்கள், முதியோரை கனம்பண்ணல் எனும் கருமங்கள் மீண்டும் துளிர்விடும் சந்தர்ப்பம் உள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

இன்றை எனது ஆசிகளை காட்டு விநாயகர் பரிபாலன சபையின் அயராத பணிகள் சிறக்கவும் அகிலமெங்கும் காட்டு விநாயகர் இணையம் மூலம் ஆலய அடியவர்கள் ஆலய தகவலை அறியவும் உருவாக்கப்பட்ட காட்டுவிநாயகர் இணையம் மேலோங்க எனது ஆசிகளை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

திரு ஆ.முருகுப்பிள்ளை
காலாபூசணம்
முள்ளியவளை கிழக்கு
முள்ளியவளை.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares